சங்கடப்படுத்தும் ‘ைகனக்ககோமாஸ்டியா’ [ஆண் மார்பக வளர்ச்சி ] – தீர்வு தரும் நவனீ சிகிச்ைச முைற

Serving Chennai, Madurai, Coimbatore, and surrounding areas in India

சங்கடப்படுத்தும் ‘ைகனக்ககோமாஸ்டியா’ [ஆண் மார்பக வளர்ச்சி ] – தீர்வு தரும் நவனீ சிகிச்ைச முைற

Article #271 of 271

இளம் பருவத்தில் சில ஆண் குழந்தைகளுக்கு வெளியில் ெசொல்லத் தயங்கும் ஒரு பிரச்சினை உருவாகலாம். அது, பெண்களைப் ேபோல மார்பக வளர்ச்சி காணப்படுவது. இந்த நிலை உடல்ரீதியாக பெரிய பாதிப்பை ஏற்படுத்தாதேபோதிலும், மனரீதியாக பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. நண்பர்களின் கேலி, சமூகத்தில் ஏற்படும் தயக்கம், தன்னம்பிக்கை குறைவு ேபோன்ற காரணங்களால் பலர் இந்த பிரச்சினையை மறைத்துக் ெகொண்டு வாழ்கிறார்கள்.

இந்த நிலை ஏன் ஏற்படுகிறது? இதற்கு நிரந்தர சிகிச்சை உள்ளதா? என்பது குறித்து சென்னை பிளாஸ்டிக் சர்ஜரியின் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் கார்த்திக் ராமசாமி விளக்குகிறார்.

ைகனக்ககோமாஸ்டியா என்றால் என்ன?

ஆண்களும் பெண்களும் இருவரின் உடலிலும் ஈஸ்ட்ேரோஜன் மற்றும் டெஸ்ேடோஸ்டிேரோன் என்ற இரண்டு முக்கிய ஹார்ேமோன்கள் இயல்பாகவே காணப்படுகின்றன. பருவ வயதில் சிறுவர்களுக்கு டெஸ்ேடோஸ்டிேரோன் அதிகரிக்க வேண்டும். ஆனால் சிலருக்கு ஆரம்பத்தில் ஈஸ்ட்ேரோஜன் ஹார்ேமோன் அதிகமாக செயல்படுவதால் மார்பக திசுக்கள் வளரத் ெதொடங்குகின்றன.

பெரும்பாலானவர்களுக்கு ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகளில் ஹார்ேமோன் சமநிலை திரும்பிவிடும். ஆனால் வளர்ந்த மார்பக திசுக்கள் மட்டும் சுருங்காமல் இருப்பதால் மார்பகம் பெரிதாகத் ேதோன்றும். இந்த நிலையே ைகனக்ககோமாஸ்டியா (Gynecomastia) எனப்படுகிறது.

இது உடல்நல பாதிப்பா?

இந்த நிலை ெபொதுவாக உடல்நலத்திற்கு ஆபத்தானதல்ல. ஆனால் மனநலத்தில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

  • சட்டையின்றி வெளியே செல்ல தயக்கம்
  • நீச்சல் குளம், கடற்கரை ேபோன்ற இடங்களைத் தவிர்ப்பது
  • நண்பர்களின் கேலி மற்றும் கிண்டலால் மன அழுத்தம்
  • தன்னம்பிக்கை குறைவு
  • சிலருக்கு திருமணம் பற்றிய அச்சம் கூட உருவாகலாம்

இதனால் ேநோயாளிகளின் வாழ்க்கைத் தரம் பாதிக்கப்படுவது மருத்துவ ரீதியாகவும் கவனிக்கப்படுகிறது.

சிகிச்ைச எப்படி அளிக்கப்படுகிறது?

கைனக்ேகோமாஸ்டியா ெபொதுவாக நான்கு நிலைகளாக (Grades 1–4) வகைப்படுத்தப்படுகிறது.

கிேரடு 1 மற்றும் 2:
மார்பக வளர்ச்சி குறைவாக இருக்கும். இந்த நிலையில் லிப்ேபோசக்ஷன் (Liposuction) மூலம் தேவையற்ற ெகொழுப்பு மற்றும் திசுக்களை அகற்றி இயல்பான மார்பக வடிவத்தை உருவாக்க முடியும்.

கிேரடு 3 மற்றும் 4:
மார்பகம் பெண்களின் மார்பகத்தைப் ேபோன்ற அளவுக்கு வளர்ந்திருக்கும். இந்த நிலையில் அறுவை சிகிச்சை அவசியமாகிறது.

நவனீ ‘பிளாஸ்டர் லிப்ட் ெடக்னிக்’

முன்னர் பயன்படுத்தப்பட்ட அறுவை சிகிச்சை முறைகளில் அதிகப்படியான ேதோலை அகற்றி, நிப்பிளை மீண்டும் ெபொருத்தும் முறை இருந்ததால் கண்கூடாகத் தெரியும் தழும்புகள் ஏற்பட வாய்ப்பு இருந்தது.

இந்த சவாலை சமாளிக்க சென்னை பிளாஸ்டிக் சர்ஜரி குழு “Plaster Lift Technique” என்ற புதிய அறுவை சிகிச்சை முறையை உருவாக்கியுள்ளது. இந்த ெதொழில்நுட்பம் சர்வதேச மருத்துவ இதழ்களில் வெளியிடப்பட்டுள்ளதுடன், உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர்களுக்கும் இதற்கான பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.

இந்த முைறயின் சிறப்பம்சங்கள்

  • மிகக் குறைந்த அளவில் மட்டுமே தழும்புகள் காணப்படும்.
  • இயற்கையான மார்பக வடிவம் கிடைக்கும்.
  • அறுவை சிகிச்சைக்குப் பிறகு நீர் ேகோர்ப்பதைத் தடுக்க Quilting Method பயன்படுத்தப்படுகிறது.
  • இதன் மூலம் ேதோல் மற்றும் உட்புற திசுக்களுக்கு இடையில் இடைவெளி உருவாகாமல் பாதுகாக்கப்படுகிறது.
  • முன்னர் அதிகமாகக் காணப்பட்ட நீர் ேகோர்ப்பு தற்ேபோது மிகவும் அரிதாக மட்டுமே ஏற்படுகிறது.
  • ரத்தக்கசிவு அபாயம் குறைக்கப்பட்ட பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன.
  • சுரப்பி திசுக்களை அகற்றுவதுடன் லிப்ேபோசக்ஷனும் இணைத்து செய்யப்படுகிறது.
  • அதிநவனீ லேசர் ெதொழில்நுட்பம் பயன்படுத்தப்படுவதால் ேதோல் இறுக்கமாகவும் அழகாகவும் அமைகிறது.

சிகிச்ைசக்குப் பிறகு

இது ஒரு Day Care Surgery ஆகும்.

  • காலை மருத்துவமனைக்கு வந்து மாலைக்குள் வட்டிற்குத்ீ திரும்பலாம்.
  • உள்ளூர் ேநோயாளிகள் ஒரு வாரம் கழித்து தையல் எடுப்பதற்காக வர வேண்டும்.
  • வெளியூர் அல்லது வெளிநாட்டு ேநோயாளிகள் ஒரு இரவு மட்டும் மருத்துவமனையில் தங்கி, மறுநாள் பயணம் மேற்ெகொள்ளலாம்.

யாெரல்லாம் இந்த சிகிச்ைச ேமற்ககொள்ளலாம்?

13 வயதிற்கு மேற்பட்டவர்கள், கைனக்ேகோமாஸ்டியா நிரந்தரமாக நீடித்து மனஅழுத்தம் அல்லது ேதோற்றக் குறைவு ஏற்படுத்தினால் அறுவை சிகிச்சை செய்து ெகொள்ளலாம்.

வலி இருந்தால் மருந்துகள் மூலம் குறைக்க முடியும். ஆனால் வளர்ந்த திசுக்களை மருந்துகள் கரைக்க முடியாது. அதனால் அறுவை சிகிச்சை மட்டுமே நிரந்தர தீர்வாகும்.

சிகிச்ைசக்குப் பிறகு கவனிக்க ேவண்டியைவ

  • 10 நாட்கள் இருசக்கர வாகனம் ஓட்ட வேண்டாம்.
  • 15 நாட்கள் கார்டிேயோ பயிற்சிகளைத் தவிர்க்க வேண்டும்.
  • 45 நாட்கள் பளு தூக்கும் உடற்பயிற்சிகளை செய்யக்கூடாது.
  • மருத்துவர் அறிவுறுத்தும் காலத்திற்கு சிறப்பு கம்ப்ரஷன் ஆடை அணிய வேண்டும்.

இதற்கு காரணம் ஹார்மமோன் மட்டும்தானா?

ஹார்ேமோன் மாற்றங்கள் முக்கிய காரணமாக இருந்தாலும், சில வெளிப்புற காரணிகளும் கைனக்ேகோமாஸ்டியாவை ஏற்படுத்தலாம்.

  • அனேபோலிக் ஸ்டீராய்டு (Anabolic Steroids) பயன்பாடு
  • தரமற்ற புேரோட்டீன் சப்ப்ளிமெண்ட்கள்
  • உடல் கட்டமைப்பை வேகமாக அதிகரிக்க பயன்படுத்தப்படும் சட்டவிேரோத மருந்துகள்

இத்தகைய காரணங்களால் உருவாகும் மார்பக திசுக்கள் மிகவும் கடினமாக இருக்கும். எனவே, உடல் வளர்ச்சிக்காக செயற்கை வழிமுறைகளைத் தவிர்த்து, இயற்கையான உடற்பயிற்சி மற்றும் சீரான உணவுமுறையைப் பின்பற்றுவது பாதுகாப்பானது.

முடிவுைர

கைனக்ேகோமாஸ்டியா என்பது பல இளைஞர்களை மனரீதியாக பாதிக்கும் ஒரு ெபொதுவான நிலை. இது வெட்கப்பட வேண்டிய பிரச்சினை அல்ல. சரியான மருத்துவ ஆேலோசனை மற்றும் நவனீ அறுவை சிகிச்சை முறைகள் மூலம் நிரந்தரமாகச் சரிசெய்ய முடியும். ஆரம்பத்திலேயே தகுந்த பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணரை அணுகுவது சிறந்த தீர்வாகும்.